university college of engineering,pattukkottai

Click here to edit subtitle

Blog

HAPPY CHIRSTMAS FRIENDS

Posted by [email protected] on December 6, 2013 at 9:15 AM

கிறித்துமசு (Christmas) அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நத்தார் [1] ) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் துவக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் கெரொல் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.[2] இக்கொண்டாட்டத்தின் மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.[3]

கிறிஸ்துமஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாங்களில் காணப்படும் மேற்குலக நாகரிங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாங்கள் வேறுபடுகின்றன.

திருவழிபாட்டு ஆண்டு

(கத்தோலிக்கம்)

திருவழிபாட்டுக் காலங்கள்

திருவருகைக் காலம்

கிறிஸ்து பிறப்புக் காலம்

தவக் காலம்

பாஸ்கா முந்நாட்கள்

பாஸ்கா காலம்

பொதுக் காலம்

முக்கியப் பெருவிழாக்கள்

கிறிஸ்து பிறப்பு

ஆண்டவரின் திருக்காட்சி

ஆண்டவரின் திருமுழுக்கு

இயேசுவின் உயிர்ப்பு

இயேசுவின் விண்ணேற்றம்

தூய ஆவியாரின் வருகை

மூவொரு இறைவன்

கிறிஸ்து அரசர்

பொருளடக்கம் [மறை]

1 வரலாறு

1.1 கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்

1.1.1 சடுர்நலியா பண்டிகை

1.1.2 நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை

1.1.3 யூல் பண்டிகை

1.2 கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

1.3 மத்திய காலம்

1.4 சமய மறுசீரமைப்பும் 1800களும்

1.5 20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்

2 பிறப்பு

3 பிரதேச கொண்டாட்டங்கள்

3.1 இலங்கையில் கிறிஸ்துமஸ்

3.2 இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்

4 உசாத்துணை

5 குறிப்புகள்

5.1 பிறமொழிப் பெயர்களின் பட்டியல்

5.2 கலைச்சொல் பட்டியல்

வரலாறு[தொகு]

 

கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்[தொகு]

குளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.[4]. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது; மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.[5] இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:

சடுர்நலியா பண்டிகை[தொகு]

 

 

இயேசுவை ஒளிவீசும் சூரியனாக சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்

உரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டது. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது.[6] சடுர்நலியாவிம் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டது.[7] சடுர்நலியா சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17-டிசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.[8]

நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை[தொகு]

உரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினார்.[9] இது கி.மு. 218-222 இல் உரோமை அரசனான எலகாபலுஸ் காலத்தில் உரோமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.[10] சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார்.[11][12] டிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டது, இதனை உரோமர்கள் புருமா என அழைத்தனர்.[6] ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜுலியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்கால சம இராப்பகல் நாள் டிசம்பர் 25 நாளில் வந்தது எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.[13] சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்,[14] எடுத்துக்காட்டாக, சிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு 300கள் - கிபி258) பின்வருமாறு எழுதியுள்ளார்:

“ O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born

ஓ, எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின் செயல், சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது ”

—சிப்ரியன், [13]

மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாயினர்.

எனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.

யூல் பண்டிகை[தொகு]

 

 

யூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்

ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது தோர், இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம்.[15] யேர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.[16] வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.[17]

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்[தொகு]

 

 

ஒரிஜென், ஆரம்ப கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.

இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது.[14] இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.[18] மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.[18] ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதினார்கள்.[18] இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும்; இது, தீர்க்கதரிசி (இறைவாக்கினர்) ஒருவர் முழு எண்ணளவான நாட்களே உயிர் வாழ்வாரென்ற யூதர்களது நம்பிக்கையின் காரணமாக எழுந்ததாகும்.[18] தொடக்க கால கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி. 245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் பார்வோனனரசரைப் போல இயேசுவின் பிறப்பை கொண்டாடக்கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும் புனிதர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார்.[5]. ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.[13][19] கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[20]. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது; இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.

கிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தை, மகன், தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[13]

மத்திய காலம்[தொகு]

 

 

கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்

ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் "புனித மார்டினின் நாற்பது நாட்கள்" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் திருவருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது.[21] இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது.[21] 12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.[21]

கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.[21] யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டத

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments